என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » அமெரிக்க ஓபன்
நீங்கள் தேடியது "அமெரிக்க ஓபன்"
அமெரிக்கா ஓபன் டென்னிசின் இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகாவை சந்திக்கிறார் செரீனா வில்லியம்ஸ். #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka
நியூயார்க்:
அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இன்று நடைபெற்ற பெண்களுக்கான அரையிறுதி ஒன்றில் லாத்வியாவை சேர்ந்த செவாஸ்டோவாவும், அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்சும் மோதினர்.
இதில், 6-3 , 6 -0 என்ற கணக்கில் செவாஸ்டோவாவை எளிதாக வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ்.
இதேபோல், மற்றொரு அரையிறுதி போட்டியில், அமெரிக்காவின் மாடிசன் கெய்சும், ஜப்பானின் நவோமி ஒசாகாவும் மோதினர். இந்த போட்டியில், 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் மாடிசன் கெய்சை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் ஒசாகா.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், ஜப்பானின் ஒசாகாவும் மோதுகின்றனர். #USOpen2018 #SerenaWilliams #NaomiOsaka
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் ஜோ சவுசாவை வீழ்த்திய நோவக் ஜோகோவிச் காலிறுதியில் நுழைந்தார். #USOpen2018 #NovakDjokovic #JoaoSousa
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிக்கும், போர்ச்சுக்கல்லை சேர்ந்த ஜோ சவுசாவும் மோதினர்.
போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே ஜோகோவிச் விட்டுக் கொடுக்காமல் விளையாடினார். இதனால் முதல் செட்டை 6 -3 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 6 - 4 என்ற கணக்கிலும் வென்றார். மூன்றாவது சுற்றையும் 6 - 3 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், ஜோகோவிச் 6-3 6-4 6-3 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி போட்டியில் ஜோகோவிச் பரம எதிரியான ரோஜர் பெடரருடன் மோதுகிறார். #USOpen2018 #NovakDjokovic #JoaoSousa
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் பிலிப் கோல்ஸ்கரைபரை வீழ்த்திய கெய் நிஷிகோரி காலிறுதிக்குள் நுழைந்தார். #USOpen2018 KeiNishikori #PhilippKohlschreiber
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், ஜப்பானை சேர்ந்த கெய் நிஷிகோரியும், ஜெர்மனியை சேர்ந்த பிலிப் கோல்ஸ்கிரைபரும் மோதினர்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே நிஷிகோரி அபாரமாக ஆடினார். இதனால் 6-3 என முதல் செட்டை கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டை கைப்பற்ற வேண்டும் என இருவரும் தீவிரமாக ஆடினர். ஆனால், நிஷிகோரி திறமையாக விளையாடி 6-2 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் வென்றார்.
மூன்றாவது சுற்றில் கோல்ஸ்க்ரைபர் சற்று நெருக்கடி தந்தாலும், சுதாரித்துக் கொண்ட நிஷிகோரி மூன்றாவது செட்டை 7-5 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், நிஷிகோரி 6-3 6-2 7-5 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். காலிறுதி போட்டியில் நிஷிகோரி மரின் சிலிச் அல்லது டேவிட் கோல்பினுடன் மோதுகிறார். #USOpen2018 KeiNishikori #PhilippKohlschreiber
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் நிகோலஸ் பாசிலாஷ்விலியை வீழ்த்திய ரபெல் நடால் காலிறுதிக்குள் நுழைந்தார். #USOpen2018 #RafaelNadal
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபெல் நடாலும், ஜார்ஜியா நாட்டை சேர்ந்த நிகோலஸ்
பாசிலாஷ்விலியும் மோதினர்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே நடால் அதிரடியக ஆடினார். இதனால் 6-3, 6-3 என முதல் இரண்டு செட்களை கைப்பற்றினார்.
இதையடுத்து சுதாரித்துக் கொண்ட நிகோலஸ், மூன்றாவது செட்டை போராடி 7-6 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து, நான்காவது சுற்றில் நடால் 6-4 என்ற கணக்கில் வென்றார்.
இறுதியில், ரபெல் நடால் 6-3 6-3 6-7(6) 6-4 என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்த போட்டி சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் வரை நடைபெற்றது.
காலிறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டொமினிக் தீமுடன் மோதுகிறார். #USOpen2018 #RafaelNadal
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் கெவின் ஆண்டர்சனை வீழ்த்திய டொமினிக் தீம் காலிறுதிக்குள் நுழைந்தார். #USOpen2018 #DominicThiem
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த டொமினிக் தீம் மற்றும் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கெவின் ஆண்டர்சனும் மோதினர்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே டொமினிக் தீம் அபாரமாக விளையாடினார். இதனால் 7- 5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.
தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டிலும் டொமினிக் தீம் சிறப்பாக விளையாடினார். இதனால் இரண்டாவது செட்டை 6 -2 என்ற கணக்கிலும், மூன்றாவது செட்டை 7-6(2) என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், டொமினிக் தீம் 7-5 6-2 7-6(2) என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதி போட்டியில் டொமினிக் தீம் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் அல்லது நிகோலஸ் பாசிலாஸ்விலியுடன் மோதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #USOpen2018 #DominicThiem
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் ரஷ்ய வீரர் காரென் கச்சனோவை விழ்த்தி ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். #USOpen2018 #RafaelNadal
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ரஷ்ய வீரர் காரென் கச்சனோவும், ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலும் மோதினர்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் கச்சனோவ் அதிரடியாக ஆடினார். இதனால் முதல் செட்டை 7 - 5 என்ற கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் ரபெல் நடால் சுதாரித்துக் கொண்டு தனது அதிரடியை ஆரம்பித்தார். அதனால் இரண்டாவது செட்டை 6 - 5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
மூன்றாவது மற்றும் நான்காவது செட்களில் கச்சனோவ் நடாலுக்கு கடும் சவாலாக விளங்கினார். மூன்றாவது செட்டை 7 - 6 என்ற கணக்கிலும், நான்காவது செட்டை 7 - 6 என்ற கணக்கிலும் ரபெல் நடால் கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், ரபெல் நடால் 5 - 7, 6 - 5, 7- 6, 7 - 6 என்ற கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டி சுமார் 4 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. #USOpen2018 #RafaelNadal
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீரர் பெனோயிட் பைரேவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் ரோஜர் பெடரர். #USOpen2018 #RogerFederer
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஐந்து முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரரும் பிரான்ஸ் வீரர் பெனோயிட் பைரேவும் மோதினர்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பெடரர் சிறப்பாக ஆடினார். இதனால் முதல் செட்டை 7 -5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கிலும், மூன்றாவது சுற்றை 6-4 என்ற கணக்கிலும் பெடரர் கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில், ரோஜர் பெடரர் பெனோயிட் பைரேவை 7-5, 6-4. 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். முன்னணி வீரரான பெடரர் மூன்றாவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோசுடன் மோதுகிறார். #USOpen2018 #RogerFederer
அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் பிரிட்டிஷ் வீரர் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வியடைந்தார். #USOpen2018 #AndyMurray
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பிரிட்டிஷ் வீரர் ஆண்டி முர்ரேவும், ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெர்னாண்டோ வெர்டஸ்கோவும் மோதினர்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆண்டி முர்ரேவுக்கு கடும் சவாலாக விளங்கினார் வெர்டஸ்கோ. இதனால் முதல் செட்டை 7 -5 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆண்டி முர்ரே இரண்டாவது செட்டை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
ஆனால் அதற்கு அடுத்த இரு செட்களையும் வெர்டஸ்கோ அபாரமாக ஆடினார். இதனா;, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்றார்.
இறுதியில், வெர்ட்ஸ்கோ ஆண்டி முர்ரேவை 7-5, 2-6, 6-4. 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். முன்னணி வீரரான ஆண்டி முர்ரே இரண்டாவது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். #USOpen2018 #AndyMurray
அமெரிக்கா கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் கரோலின் வோஸ்னியாக்கி முதல் சுற்றில் எளிதில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். #USOpen2018 #USOpen #CarolineWozniacki
நியூயார்க்:
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸின் கடைசி தொடரான அமெரிக்கா ஓபன் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றைய ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான டென்மார்க் நாட்டை சேர்ந்த கரோலின் வோஸ்னியாக்கியும், ஆஸ்திரேலியாவை சேர்ந்த சமந்தா ஸ்டோசரும் மோதினர்.
போட்டியின் தொடக்கத்தில் இருந்தே வோஸ்னியாக்கி அபாரமாக விளையாடினார். இதனால் அவர் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டை கைப்பற்றும் விதமாக ஸ்டோசர் போராடினார். ஆனால அவரது போராட்டத்தை தடுத்து, இரண்டாவது செட்டையும் 6-2 என்ற கணக்கில் வோஸ்னியாக்கி கைப்பற்றினார்.
இதையடுத்து, 6-3, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்டோசரை வென்று கரோலின் வோஸ்னியாக்கி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். #USOpen2018 #USOpen #CarolineWozniacki
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X